About Me

ராஜ்மோகன் சுப்ரமண்யன்.
ஊடகவியலாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்.சொந்த ஊர் திருவண்ணாமலை. புதுவைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகத்தில் மேலாண்மைப் பட்டம். கோவை பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் வேதாத்ரி மகரிஷி குண்டலினி ஆராய்ச்சி மையத்தின் யோகமும் மனித மாண்பும் படிப்பில் முதுநிலைப் பட்டம், சென்னைப் பல்கலைக் கழகத்தில் உளவியலில் முதுநிலைப் பட்டம். மனோவசியகலை மற்றும் ஆளுமை திறனூக்க பயிற்சியில் பட்டயமும் பெற்றுள்ளார்.ஊடகவியல்துறையில் பத்தாண்டு அனுபவம். பல்வேறு வார இதழ்களில் பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகள்.தொலைகாட்சி மற்றும் விளம்பரபடம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.கன்னடத் தொலைக்காட்சியுலகில் லட்சுமியுடன் கதை அல்ல ஜீவனா, கோல்டன் ஸ்டார் கணேஷூடன் ததாஸ்து மற்றும் சிவராஜ் குமாருடன் நானிருவதே நினகாகி ஆகிய நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். இது மட்டுமின்றி முன்னனி தொழில் நிறுவனங்களுக்கு கார்பரேட் படங்களுக்ம், 50 க்கும் மேற்பட்ட விளம்பரங்களும் இயக்கியுள்ளார். இவரின் பொழுது போக்கு யோகா பயிற்சி அளிப்பது மற்றும் பயணங்கள் மேற்கொள்வது. தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.