Friday, July 13, 2018

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத்துவங்கிவிட்டது.
நண்பர்கள் சிலர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒருவர் இதனை கமெண்ட் செய்தார். அந்த பொடியனில் ஒருத்தன் ஏதோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொன்ன சொல், உள்ளே காத்தும் இல்லை சோறும் இல்லை அங்கே தியானம் செஞ்சா உயிர் பிழைச்சிட முடியுமா ? ஏதோ அந்த பசங்களோட அதிர்ஷம்....ஆயுசு கெட்டி என்று இன்னும் அளந்துகொண்டே போனார்....
நான் அங்கு அவருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ஏன் எனில் அவரின் மனசுவர் அப்படி. அதனை உடைத்து நான் ஒன்று கிழிக்கப்போவதில்லை . இருப்பினும் தியானம் யோகம் என்று பிதற்றிகொண்டு திரியும் நான் இது பற்றி சின்ன விளக்கம் தரலாம் என்பதினாலேயே இந்த பதிவு.
இமயத்தின் உச்சிக்கு குறிப்பாக நீங்கள் திபெத் பகுதிக்கு சென்றால் அங்கு நிறைய புத்த பிட்சுகளை பார்க்க முடியும். அங்கு நாம் பயணிக்கும் நிலைக்கான தட்பவெட்ப நிலை என்பது வருடத்தில் இரண்டு மாதமோ மூன்றுமாதமோ மட்டுமே. மற்ற நேரங்களில் ஒரு மண்ணும் தெரியாத நிலையில் பனி மூடி கிடக்கும். அத்தகையை சூழல்களில் இந்த பிக்குகள் வெளியில் வராமல் குகைக்குள்ளேயே இருப்பார்கள். பெரும்பாலும் யோகமோ இல்லை தியானமோ மட்டுமே செய்வார்கள். பசிக்கு ஏற்கனவெ பதப்படுத்தி வைத்திருக்கும் சில உணவுகளை பழங்களை சின்ன அளவில் எடுத்துகொள்வார்கள். உடல் இயக்க அளவில் சின்னதாக பசி வருமே தவிர உடல் சக்தி எப்பொழுதும் நிரம்பி இருக்கும்.
மனோசரவோர் ஏரிக்கு சென்றவர்கள் அங்கிருந்து ஒரு ஐந்து கிலோ மீட்டர் மேலே நடந்தால் ஜுகும்பா என்றொரு சின்ன குன்று வரும். அதன் உச்சியில் இதுபோன்ற பலரை பார்க்கலாம்.
அங்கு இது சாத்தியாமாக இருக்கிறது எனில் அந்த பிள்ளைகள் குகையில் இதே யுக்தியில் உயிரை தக்கவைத்துகொண்டதும் சாத்தியம்தான்.
யோகம் செய்பவனுக்கு முதல் தகுதி அச்சம் முதலில் முற்றிலும் விலகிவிடும். ஆழ்மனதில் உயிர்பயம் அறவே இல்லாமல் போய்விடும்.
அடுத்து அவனின் இதய துடிப்பு வழக்கத்தை விட குறைவாக இருக்கும். அதனால் உள்ளே இழுக்கப்படும் ஆக்சிஜன் அளவு உள்ளெயே வழக்கத்தைவிட அதிக நேரம் தங்கி வெளிப்படும். 
அடுத்து அவனின் ஆழ்மன அறிவு சாகப்போறோமா இல்லை உயிரோடு இருக்க போறோமா என்று முன்பே உணர்த்திவிடும். குகை மூடிய நிலையில் நாமெல்லாம் சாகமாட்டோம் உயிர் பிழைத்துவிடுவோம் என்ற அசாத்திய எண்ணம் வலுப்பெற்று அது அலையாக மாறி வெளியில் மீட்டுபணியில் ஈடுபடுவோரின் மன அலையோடு ஒத்து நின்று ஒத்துழைக்கும்
நம்ம ஊரில் கிணற்றிலோ அல்லது போர்வெல்லிலோ விழுந்தவுடன் முதலில் பிள்ளை அச்சப்படும் . அச்சப்பட்ட வினாடியில் அதன் உயிர்சக்தி வெளியாகிகொண்டேயிருக்கும். வெளியில் இருந்து நம்ம ஆட்கள் போடும் கூப்பாடு மேலும் நிலைமையை மோசமாக்கி ஏற்கனவே கரைந்துகொண்டிருக்கும் உயிர்சக்தியை மேலும் விரயமாக்கிவிடும்
அடுத்து தியானம் என்பது கை அசைவோ கால் அசைவோ மூச்சை கவனிப்பதோ மட்டுமல்ல அது அலைவரிசை மாற்றம். உதாரணமாக நாம் உட்கார்ந்து இருக்கிறோம். நாம் உட்கார்ந்திருப்பது ஒரு அலைவரிசை. அதாவது 13 CPS என்று வைத்துகொள்ளுங்கள். CPS என்பது cycle per second. நாம் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அலை சூழல் 0 முதல் 3 வரைக்கிறது என்று வைத்துகொள்ளுங்கள். உங்கள் அலைச்சூழல் 13 ல் இருந்து மூன்றாக வரும் பொழுது நீங்கள் இயற்கையாக அங்கு இருக்கும் அலைச்சூழலுக்கு செல்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் இயற்கையின் பாதுகாப்பு வளையத்தினுள் இருக்கிறீர்கள். உங்களுக்கு எது நன்மையோ அது மட்டுமே நிகழும். தியானம் செய்யும் பொழுது உங்கள் அலைச்சூழல் எளிதாக குறைந்து குறைந்து இந்த அலைச்சூழலுக்கு வந்துவிடும்.
அச்சமற்ற நிலை. இயற்கை அலைச்சூழலுக்கு ஏற்ப நமது அலைச்சூழலையும் மாற்றி அமைப்பதின் மூலம் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல் தக்கவைத்துகொள்ள முடியும்.
யோகமும் தியானமும் நம்ம ஊரு சொத்து என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம். ஆனால் அதனை முழுமையாக சீனவழி பரம்பரைதான் பயன்படுத்தி வருகிறது. நாம் நம்ம பிள்ளைகளை மேற்கத்தியை வித்தைகளில் பழக்குகிறோம்.
இது தாய்லாந்துக்கு நேர்ந்த நிகழ்வு என்று பாராமல் நாளை நம்ம பிள்ளைகளுக்கு நிகழ்ந்தால் எப்படி நிகழும் என்று யோசித்துபாருங்கள்.
பயனற்ற பயிற்சிகளில் பிள்ளைகளை சேர்க்காமல் உடல் மனம் வலிமை தரும் பயிற்சிகளில் சேருங்கள். யோகா , தியானம். நீச்சல், மலையேறுதல், முக்கியமாக இயற்கை பற்றிய அறிவு . ஏட்டு அறிவு அல்ல அனுபவ அறிவு பெற உதவுங்கள்.
தியானம் எல்லாம் பெற்று தரும்,

No comments:

Post a Comment

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...