Posts

Showing posts from 2016

மொழி வழி !

Image
மொழி சார்ந்த அரசியல்தான் தமிழ்நாட்டின் உயிர் நாடியாக இருந்திருக்கிறது. ஒரு மொழியை எதிர்த்தே ஒரு கட்சி ஆட்சியை பிடித்தது. நாற்பது ஆண்டுகாலமாக உயிர்துடிப்புடன் இருக்கிறது. ஹிந்தி மொழி திணிப்பை பற்றி சொல்லத்தான் கேட்டிருக்கிறேன். அப்பொழுது பிறக்கவில்லை என்பதால் அதை பற்றி முழுமையாக கருத்து சொல்லமுடியாது. கண்ணால் காண்பதும் பொய் ! காதால் கேட்பதும் பொய் ! தீர விசாரிப்பதே மெய் ! என்று சொல்வார்கள்.      ஹிந்தி மொழி திணிப்பு பற்றி மூத்தவர்களை கேட்டால் அவர்கள் சொல்வதும், நூல்களை புரட்டினால் அதில் சொல்லப்பட்டு இருப்பதும் மாறுபட்டு நிற்கிறது. வரலாறு கொஞ்சம் திரிபுகள் கொண்டதுதான். தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பை காண்பித்த அதே வேளையில் ஒவ்வொருவரும் கட்டாயம் ஹிந்தி படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். 
இந்தி மட்டுமல்ல பிறமொழி கற்கும் ஆர்வம் நம் மக்களிடையே இல்லாதது மிக ஆச்சர்யமாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் கூடுதல் மொழியாக பிரெஞ்சு, இந்தி, ஜெர்மன், ஜப்பனீஸ் போன்றவை படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கிராம குழந்தைகளுக்கு ஆங்கிலமே தகினத்தோம் தான்.
ஒருவனுக்கு எத்…

மனம் நிறைய மகிழ்ச்சி !

Image
என்னை யார் சந்தித்தாலும் உடனே வெளிப்படுத்தும் விருப்பம் “ எனக்கும் யோகா கத்துக்கணும்னு ஆசையா இருக்கு, ஆனா டைம் இல்லை “. நான் பெரும்பாலும் இத்தகைய மனிதர்களுக்கு புன்னகையதான் பரிசளிப்பேன். அடுத்து எதற்கு யோகா கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டால் அவர்களிடம் சரியான பதில் இருக்காது. அவர்கள் யோகா கற்றுக்கொள்ள விரும்பும் காரணம் ஒன்று அதிக வேலை பளு அல்லது மன அழுத்தம் என்றிருக்கும். நான் செய்கின்ற வேலையில் திருப்தி இல்லை என்பதாக இருக்கும். அல்லது யோகா கற்றுக்கொண்டால் செல்வமும் , வசதியும் வந்து குவியும் என்ற நம்பிக்கை. மூன்றுமே மனம் சம்மந்தமான பிரச்சனைதான். மனதிற்கும் உடலுக்கும் தொடர்பிருக்கிறது. நீங்கள் உடலை உற்சாகப்படுத்த செய்யும் பயிற்சி மனதை உற்சாகமூட்டும். அதற்கு யோகா உதவுகிறது. ஆனால் எனக்கு நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே யோகா கற்றுக்கொள்ள விரும்புவர்களை என்ன செய்ய முடியும். உண்மை இதுதான் ! யோகம் என்று தனியே எதுவுமில்லை. அந்த காலத்தில் வாழ்வில் உயரிய நிலையான ஞானமார்க்கத்தை தேடி அலைந்த யோகிகள் யோகம் மட்டுமே கதியென கிடந்தார்கள். ஆனால் மன்னர்களும், வணிகர்களும், இயல்பான குடிமக்களும் தங்கள் வேலையை …

மக்கள் நல கூட்டணி ?

Image
மக்கள் நல கூட்டணி உருவான போது அதைப்பற்றிய ஒரு கருத்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்டது. அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை திமுகவின் பக்கம் போகாமல் திசைதிருப்ப உருவாக்கப்பட்ட அணிதான் மக்கள் நலக் கூட்டணி என்பதுதான் அது. அதற்கு வைகோ ஒரு மறுப்பு தெரிவித்தார். அதிமுகவும் திமுகவும் தங்கள் பொது எதிரி என்றார். சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அதிமுக என்பது தலித்துக்கள் வாக்கு வங்கி நிறைந்த கட்சி. மக்கள் நலக்கூட்டணியில் தானிருப்பதால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் எனவே அதிமுகவுக்கு தான் பாதிப்பு என்றார். கம்புயூனிஸ்டுகள் கொஞ்சம் மழுப்பலாகவே பதிலளித்தார்கள். தங்கள் அணி வலிமையானது என்று செல்பி எடுத்து    நல்கினாலும்,வலுசேர்க்க கூட்டணியில் உள்ள எல்லோருக்கும் விஜயகாந்த வந்தால் நன்றாக இருக்கும் என்ற விருப்பம் இருப்பது தெரிகிறது. அரசியல் அரிச்சுவடி பழகாத ஒருவனுக்கு கூட தெளிவாக தெரியும் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் வலிமையான ஒரு அமைப்பு இன்னும் உருவாகவில்லை என்பது. அப்படி இருக்க மக்கள் நலக்கூட்டணியால அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் பிர…

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Image
இது இந்தியா ! சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் வந்த ஒலி ஒளிக் காட்சி. அது ஒரு அடர்ந்த வனப்பகுதி. நடுவில் பெரும் சாலை. புகையைக் கக்கிகொண்டு ஒரு கார் அந்த சாலையில் விரைகிறது. திடீரென்று விர்ரென்று ஒரு சத்தம். காரின் பின்புலத்தில்  இருந்து புகை காற்றில் கரைய அந்த காட்சி நம் இதயத்தில் இரத்த ஓட்டத்தை உறைய செய்கிறது. பிறந்து சில வாரங்களே ஆன பால்மனம் மாற சிறிய குரங்கு குட்டி. மூக்கில் இருந்து இரத்தம்  கசிய கண்கள் விண்ணை நோக்கி அசைவற்று நிற்க சிறிது சிறிதாக அடங்கிகொண்டிருந்தது. அதன் பார்வை என்னை ஏன் இந்த மண்ணில் படைத்தாய் இறைவா என்று பார்ப்பது போல் ஒரு பாவனை. ஒரு சில வினாடிதான் தாய் குரங்கு எங்கிருந்தோ குதித்தது. சிறிதுசிறிதாக அடங்கிகொண்டிருந்த பிள்ளைக்குரங்கினை இரு கைகளால் அணைத்து இதயத்தோடு இதயமாக தன் இதய துடிப்பை அதனுடன் பாய்ச்ச முயன்றுகொண்டிருந்தது. பாவம் அது ஒன்றும் தெய்வபிறவியில்லையே. கேவலம்  ஒரு குரங்கு ! அதனால் தன் இதயத்துடிப்பை தந்து தன் பிள்ளையின் இதயத்துடிப்பை உயிர்ப்பிக்க முடியவில்லை.  சினம் கொண்டு எழமுடியவில்லை.  கும்பல் சேர்த்து அடுத்து வரும் வாகனத்தின் மீது கல் எறியவோ, கொளுத்தவ…