காட்பாதர் தமிழ் திரைக்கதை நூல் வெளியீட்டு விழா - எழுத்தாளர் அஜயன் பாலா

இயக்குனர் பாலுமகேந்திராவின் படைப்புகளை பற்றி உலகமே பேசிக்கொண்டிருக்க, பாலுமகேந்திரா சார் சிலாகித்து பேசிய படைப்பு ஒன்று எனில் அது அஜயன் பாலாவின் “ உலக சினிமா வரலாறு .

திரைமொழி கலைக்காகவே வாழ்ந்த பாலுமகேந்திராவின் உயிர் மூச்சான கனவு திரைப்பட கலை ஆவணமாக்கப்படவேண்டும் என்பதே.பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக்கப்படவேண்டும், நல்ல சினிமா பார்க்கும் இயல்பு பாமரர்களிடம் இருந்து படித்தவர்கள் வரை எல்லோருடனும் ஏற்படவேண்டும் என்பதே இயக்குனர் பாலுமகேந்திராவின் கனவு.

அதை உறுதி செய்தது அஜயன்பாலாவின் “ உலக சினிமா வரலாறு” புத்தகம். எளிய தமிழில் உலக சினிமாவின் வரலாறு ஒரு அசாத்திய முயற்சி. இப்போது இண்டெர்நெட், 3ஜி என நவீனம் புரள்கிறது. பல நூல்களுக்கான தகவல்களை விரல் நுனியில் பெற்றுவிடலாம். இவை ஏதும் இல்லாத காலத்தில் அலைந்து திரிந்து, பல நூல் நிலையங்களை அணுகி சிக்கலான மொழிக்கு உரிய தமிழ் அர்த்தம் தேடி தமிழ் தாத்தா உ.வே.சா. தமிழ் திரட்டுகளை உருவாக்கியது போல உலகசினிமா வரலாறை அழகிய தமிழில் உருவாக்கியிருக்கிறார் அஜயன்பாலா.

அவரின் இலக்கிய ஆர்வமும் படைப்பியலும் தனி சிறப்பானவை. பல ஆண்டுகளுக்கு முன் இந்தியா டுடே இதழில் அவரின் ஒரு சிறுகதையை படித்தேன். ஒரு முக்கோண காதல் கதை போன்றது. மனித உணர்வுகளின் வெளிப்பாட்டை ஒரு அழகியலோடு வெளிப்படுத்தி இருந்தன.

மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும் என்கிற அந்த சிறுகதை அனுபவம் எல்லோர் வாழ்விலும் நிச்சயம் நிகழ்ந்திருக்க கூடிய அல்லது கடந்திருக்க கூடிய ஒரு காதல் தருணம். இந்த நான்கு ஆண்டுகளில், சென்னைவாசம் அதிகமான பின்னர் அதிக நேரம் அஜயன் அண்ணனுடன் தான் இருந்திருக்கிறேன். இலக்கிய கூட்டம், சினிமா, இரவு நேர நகர்வலம் என பொழுதகள் இனிமையானவை.

ஒருநாள் இப்படியே இருந்தா எப்படி ? ஏதாவது புத்தகம் எழுதேன் என்றார். இல்லைனா அது என் ஏரியா இல்லே, நான் சினிமா இல்லேனா டிவி புரோக்கிராம் மட்டும் தான் செய்வேன் . மெரினாவில் வைத்துகொண்டு கொஞ்சம் திட்டினார். ஒரு எழுத்தாளனாக மாறும் போது என்னென்ன முன்னேற்றங்கள் நிகழும் என்று விளக்கினார். அவரின் முதல் நூல் பைசைக்கிள்ஸ் தீவில் இருந்து இன்றுவரை கொண்டு வந்த நூல்கள் அதனால் தனக்கு கிடைத்த முகவரிகளை பற்றி விவரமாக தெரிவித்தார்.

கடைசியாக அவரே இந்த தலைப்பை தேர்ந்தெடுத்து தந்தார். கம்பர் வீட்டு கட்டுத் தறி கவிபாடும் என்பது போல் எழுத்தாளர் அஜயனின் பைக் பின்னால் உட்கார்ந்து செல்பவன் கூட ஒரு நல்ல எழுத்தாளராக முடியும் என்பதற்கு நான் உதாரணம். இந்நூல் அஜயன்பாலாவின் பெருந்தன்மை..

ஏன் எனில் இந்த நூல் வெளியீட்டை மிக பிரமாண்டமாக நடத்தவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.. அதே போல இரண்டு திரை பிரமாண்டங்களை அழைத்து வெளியீட வைத்து அசத்திவிட்டார்.

அமெரிக்க நாட்டின் மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருதுகள் பெற்ற இப்படத்தை தாய் தமிழ் மொழிப்பெயர்ப்பை இந்திய நாட்டின் மிக உயர்ந்த விருதான தேசியவிருது பெற்ற இயக்குனர்கள் வெளியீட்டது, என்னை அந்த உயர்த்திற்கு கொண்டு சென்றது அவரின் திறந்த நோக்கு, அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆர்வம். திறமையுள்ளவர்களை கை தூக்கி விடும் விருப்பம் எல்லாம் அடங்கி இருக்கிறது.
ஒரு எழுத்தாளர், ஒரு திரைப் படைப்பாளி, ஒரு இலக்கியவாதி என்கிற வட்டத்தை தாண்டி பெரும் மனிதாபிமானமும் மனிதவளத்தை போற்றும் மாமனிதராக தெரிகிறார்.
உண்மையில் ஊடகத்துறையில் எல்லாம் செய்திருக்கிறேன். ஆனால் எனக்கு முழு அங்கீகாரம் இந்த நூல்தான்.


Comments

Popular posts from this blog

கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும்

ஆழியாறு வாங்க ! ஆனந்தம் வாங்க !

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும் !