Posts

Showing posts from January, 2015

சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும் ; அஜயன் பாலா

Image
ஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல அனுபவங்களுக்கு சமமானது.
பல அனுபவங்களே தொகுப்பாக வந்தால் எப்படியிருக்கும் ?
அது தான் “ சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்” கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளரான அஜயன்பாலா தன் வாழ்வில் நிகழ்ந்த சுவரஸ்யமான தகவல்களை அழகான கட்டுரைகளாக வடித்திருக்கிறார்.
ஒல்லி பெல்லி நடிகை சிம்ரன் மீதான் ஆரம்பகால ஈர்ப்பு, பின்னாளில் அதே சிம்ரன் குண்டு பூசனையாக இருக்க யாரென்றே சரியாக அடையாளம் தெரியாமல் அவர் முன் உட்கார்ந்து,சந்தேகமுடன் கதை சொல்லிவிட்டு ஆமா ! நீங்கள் சிம்ரன் தானே என்று அவரிடமே கேட்ட அப்பாவித்தனம் என நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறது முதல் கட்டுரை.
தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரவேசம் அவரின் வாழ்வில் எத்தகைய தன்னம்பிக்கையை விதைத்தது என்பதை விவரித்து, அவரின் ரசிகனாக உருமாறி, இப்போதைய நாட்களில் ரஜினியின் செயல்பாடுகளின் தெளிவின்மையை அவரின் கோடனான கோடி ரசிகர்களின் முதல்வராக முன்னின்று கேள்வி கேட்கிறார் எழுத்தாளர் அஜயனபாலா.
ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்த இன்னொரு மனிதனுடனான தனது வாழ்வு முழுவதும் பயணித்துகொண்டே இருக்கிறான். …

புத்தக திருவிழா - எந்த வகை வாசிப்பாளர் நீங்கள் ?

Image
புத்தக கடைகளை பார்த்தவுடன் பலகார கடைக்குள் நுழைந்த சின்ன பையன் மாதிரி அது வேண்டும் இது வேண்டும் என்று மனம் ஆர்ப்பரிக்க தொடங்கிவிடும். படிக்கிறமோ இல்லையோ ஏதாவது ஒரு தலைப்பு மனசை சுண்டியிழுத்தால் உடனே  கடன் அட்டை தேய்ந்துவிடும்.
எனக்கு பெரும்பாலான சந்திப்புகள் அண்ணாசாலை பக்கம் தான். ஒரு சந்திப்புக்கும் இன்னொரு சந்திப்புக்கும் இடையே நேரம் கிடைத்தால் லேண்ட் மார்க்கில் தஞ்சம் அடைவேன். நேரம் கடத்தவே உள்ளே நுழைந்து இருக்கிறோம். சும்மா வேடிக்கைப் பார்த்துவிட்டு போகவேண்டும் என்று உறுதியான சங்கல்பம் ஏற்று உள்ளே நுழைந்தாலும் அது நிலைத்து நிற்காது. பத்து நிமிடம் உலாத்திக்கொண்டு இருந்தால் போதும் ஏதோ ஒரு தலைப்பு அல்லது புத்தகவாசனை விழியில் விழுந்து இதயம் நுழைந்து கடன் அட்டை தேயும். லேண்ட் மார்க் மூடிய கொஞ்ச நாட்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இப்போது எக்ஸ்பிரஸ் அவன்யூவில் ஸ்டார் மார்க் தொடங்கியபின் மீண்டும் அந்த பழக்க தொற்றிக்கொண்டது.
புத்தகம் படிப்பது என்பது ஒரு பழக்கமோ இல்லையோ புத்தகம் வாங்கி குவிப்பதும் ஒரு போதையாக மாறிவிட்டது. என்னைப் போல எத்தனை பேர் இந்த பழக்கத்தில் வீழ்ந்துகிடக்கிறார்கள் என்று …

”ஐ” அசத்தலும் பொத்தலும்

Image
ஐ யின் வெற்றிக்கு எமி ஜாக்சன் என்ற ஒற்றை அழகி போதும்.
"ஐ "ஸ்கீரிம் உருகும் கண்களும் காந்தப்புன்னக"ஐ”யும் ஐ – க்கு செலவழித்த பிரமாண்டங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகின்றன.

ஐ- யின் அசத்தல்கள்.
அழகும் அகோரமும் தாண்டி நிற்பதுதான் உண்மை காதல் என்ற ஒற்றை வரிதான் ஐ.
இந்த ஒற்றை வரிக்கதையை வைத்துக்கொண்டு பிரமாண்ட பேண்டஸியை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

இயக்குனர் ஷங்கருக்கு ஒரு பூங்கொத்து.
கதையின் உயிர்நாடியே விக்ரம் தான். அந்த அகோரமான மேக்கப்பையும் மீறி காதல், சோகம், ஆக்ரோஷம் என கலந்துகட்டி மெர்சலடிக்கிறார். அதுவும் இந்த வயதில் ஜிம்முக்கு போய் உடற்கட்டை ஏற்றி இறக்கி. விக்ரம் சார் நிச்சயம் உங்களின் உழைப்புக்கு உண்டு பலன்.

அடுத்து ஜில்ஜில் ஏஞ்சல் ! எமி ஜாக்சன். ஒல்லி பெல்லி. அந்த பார்வை....அந்தப் புன்னகை...அந்த நடை....அந்த நளினம்....அட போங்க பாஸு ! மார்கழி குளிரெல்லாம் இதுக்கு முன்னாடி ஜு ஜு பி.
இது எல்லாம் பிளாஷ்பேக்கில்தான். ஆனால் கடத்தபட்ட பின்பு நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை. எமிக்கிட்டே எல்லாம் நடிப்பை எதிர்பார்க்கலாமா ? இருந்தாலும் முயற்சி செஞ்சிருக்கார். இறுதியில் அகோர…

காட்பாதர் தமிழ் திரைக்கதை வெளியீடு - என்னை பத்திரிகையாளனாக ஆக்கிய எனது வாத்தியார் ஜி.கெளதம்

Image
நூல் அறுந்த பட்டம் போல் ஆரம்பமானது வாழ்க்கை. இப்படி திரிந்த பட்டத்தை பிடித்து வியூகம் அமைத்து போட்டிகளில் கலந்துகொள்ள செய்து ஒரு அடையாளத்தை தந்தவர் ஜி.கவுதம்.

பன்னிரெண்டு வகுப்பு முடிந்தவுடன் எல்லோரையும் போல மென்பொருள் படிக்கதான் எனக்கு விருப்பமாக இருந்தது. கலந்தாய்வு முடிந்து ஒரு பிரபல ஆன்மிக மையம் நடத்தும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைத்தது.கலந்தாய்வில் சொன்ன கட்டணத்தைவிட கல்லூரி வளாகம் சொன்ன கட்டணம் அதிகமாக தெரிந்ததாலும் அதனை கட்டும் சூழல் அன்றைய தினத்தில் என் குடும்பத்தில் இல்லாததாலும் என் பொறியியல் கனவு தகர்ந்தது. நண்பர்கள் எல்லோரும் ஏதோ ஒரு கல்லூரிக்கு படிக்கப் போக எனக்கு வீட்டில் இருப்பது கூச்சமாக இருந்தது. நண்பர் ஒருவர் உதவியுடன் சென்னைக்கு ஒரு எண்ணெய் கடைக்கு கணக்கெழுத வந்துவிட்டேன். தி.நகர் கண்ணாம்மாபேட்டை சுடுகாட்டு பின்னால் அந்த கடை. அங்கேயே அறைகொடுத்து இருந்தார்கள். முதல் மாடி அறையை திறந்தால் சுடுகாட்டில் பிணம் எரிவது தெரியும். ஜன்னல் கதவை மூடிவிட்டாலும் பிணவாடை வீசும். ஆறுமாதம் இப்படிதான் போனது சென்னை வாழ்க்கை. இங்கிருந்து ஒரு எஸ்டிடி பூத்திற்கு தாவினேன். இந்த நி…

விவசாயத்திற்கு திரும்பலாம் வாங்க

Image
சென்னையில் கடும் புகைமூட்டத்தால் ஐம்பதிற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டது என்ற செய்தி பொங்கல் திருவிழாவின் சந்தோஷத்தை கொஞ்சம் தொந்தரவு செய்ததது.
வழக்கமாக பனிமூட்டமிருந்தால்தான் இப்படி நடக்கும். போகியை முன்னிட்டு சென்னையில் எரித்த புகையின் தாக்கம் பனியுடன் கலந்து புகைமூட்டமாக நகரை சுழ்ந்துகொண்டது. தரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் பனிபடந்திருந்தால் விமானங்களை இயக்கமுடியும். நேற்று இது 50 அடி உயரத்திலேயே வலிமைப் பெற்று நின்றுகொண்டிருந்ததால் விமானத்தை இயக்கமுடியவில்லை.
பூமி வெப்படைதல் பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கிறோம். அதனை தடுக்க உலக நாடுகள் கோடிக்கணக்கில் கொட்டிக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களால் பூமியை இன்னும் வெப்பமாக்கும் சூழலைதான் உருவாக்கிகொண்டிருக்கும். கடந்த ஆண்டிற்கு இந்த ஆண்டிற்கும் இடையேயான சுற்று சூழல் மாசுபாட்டின் விகிச்சாரத்தை நீங்கள் அறிந்தால் நீங்கள் வெப்பமடைவீர்கள். இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் போட்டிருக்கும் இந்த சிறிய அட்டவனையைப் பாருங்கள்.
நேற்று பூமியின் மாசு இயல்புநிலையைவிட பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதில் நகைச்ச…