Posts

Showing posts from 2015

குப்பையும் குன்றிய மனநிலையும்

Image
சீரியஸுக்கும் காமெடிக்கும் ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. இங்கிருந்து தாண்டினால் சீரியஸ் காமெடியாகிவிடும்.காமெடி சீரியஸாகிவிடும்.  பீப் பாடல் என்ற வஸ்து நல்லவேளை சிம்புவோடு போயிற்று. சிம்புவின் எல்லா செயல்களுக்கும் சொம்பு தூக்கும் அவரின் அப்பாவும் இதில் இணைந்து தந்தையும் மகனும் மாறி மாறி பாடியிருந்தால் என்ன ஆகியிருக்கும் . யோசித்துப் பாருங்கள் ! ஐந்து இந்திரியங்களின் பணி அதனால் சில இன்பங்களை  துய்த்து முழுமை பெறுவதே. நல்ல செயல்களை பார்க்க கண்கள். நல்லதை நுகர நாசி நல்லதை பேச வாய் நல்லதை சுவைக்க நாக்கு இப்படியிருக்க …எப்பொழுதும் மனித மனதை சுழன்றடிக்கும்  ஒன்று. செக்ஸ் ! செக்ஸ் ! செக்ஸ் ! எங்கும் எதிலும் செக்ஸ். அதிலிருந்து வந்ததின் காரணமோ என்னவோ அதையே பற்றி தொங்கிகொண்டிருக்கிறது இந்த சமூகம். மிருகங்கள் கூட உணர்வுக்கு உட்படும் போது மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும் சதா நேரமும் இதுதான் சிந்தனையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். முப்பத்தியிரண்டு வயது பையனும். இருபத்தியொரு வயது பையனும் இணைந்து ஒரு பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். பீப் சாங்க்  (Beep Song )  என்று அதற்கு பெயரிட்டுள்ளார்கள்.…

டாஸ்மாக்கும் - ரியல் எஸ்டேட்டும்

Image
குடிப்பழக்கத்தில் இருந்து மீளமுடியாமல் இரண்டு மாணவர்கள் தற்கொலை என்ற செய்தியின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள் இன்று என்னை டாஸ்மாக் ஒன்றிற்கு விஜயம் செய்யும் வாய்ப்பை வழங்கிவிட்டது இறைநிலை.
இதை மக்கள் முதல்வரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் மதியும் விதியும் இணைந்து  எனக்கு எதிராக செய்த சூழ்ச்சி இது !

தமிழனையும் சினிமாவையும் எப்படி பிரிக்க முடியாதோ அதே போன்று டாஸ்மாக்கையும் ரியல் எஸ்டேட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.
ஒன்று உடல்நலத்தை அழிக்கிறது. இன்னொன்று வேளாண்மையை அழிக்கிறது. இரண்டிலும் சம்மந்தப்பட்ட உறவுகளும்,நட்புகளும் நம்மை சூழ்ந்து வாழ்வதால் இவ்விடங்களுக்கு சந்தர்ப்ப சூழலினால்  போக வேண்டியிருக்கிறது. ரியல் எஸ்டேட்டின்பெரும்பாலான முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தைகள் டாஸ்மாக் வளாகத்தில் தான் முடிவாகின்றன. ரியல் எஸ்டேட் மட்டுமல்ல பல வர்த்தக முடிவு மையங்கள் டாஸ்மாக்கு தான்.
எனக்கும் பெரியபாளையம் வழிச் சாலைக்கும் கிட்டத்தட்ட பத்தாண்டுக்கு மேலான தொடர்பு இருக்கின்றது. எனக்கு வேண்டிய முக்கிய நபர் ஒருவர் அங்கு இறால் பண்ணை வைத்திருந்தார்.
சனி ஞாயிறு மாலை வேளைகளில் இறால…

என்னை அறிந்தால் - ஷமிதாப்

Image
பிரபலமானவர்களின் பங்கேற்பு இருக்கிறது என்பதால் ஆஹா ! ஓஹோ ! என்று புகழும் கலாச்சாரம் பெருகி வருகிறது. இது சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் என்னை அறிந்தால் மட்டும் ஷமிதாப் படங்களுக்கும் பொருந்தும்.
என்னை அறிந்தால் ; முந்தைய அஜித் படங்களோடு ஒப்பிடும் போது மகா மோசம். ஆனால் வயதுக்கேற்ற வேடங்களை விரும்பி செய்யும் இயல்பான அஜித்தின் நிஜமான தயாள குணத்தை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்
ஷமிதாப் : முந்தைய பால்கி படங்களோடு ஒப்பிடும் போது கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் நடிப்பில் பூந்து விளையாடும் தனுஷ் மற்றும் அமிதாப்பிற்காக ஓகே சொல்லலாம்.

என்னை அறிந்தால் :
தன் காதலியை கொன்றவனை பழிவாங்கத் தேடி அலையும் ஒரு போலிஸ் ஆபிசர், முயற்சியின் ஊடே ஒரு உறுப்புதிருட்டு கும்பலை கண்டுபிடித்து எப்படி அழிக்கிறார் என்பதுதான் கதை.
இதனை காக்க காக்க படத்தின் சீகுவலாக எடுத்திருந்தாலே கூட போதும், தெளிவாக திரைக்கதை எழுதி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கமுடியும்.
ஆனால் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, இன்னொரு மிஷ்கின் படம் என்று கலந்துகட்டி நமக்குள் ஒரு புத்துணர்வு எழாத சூழலை தந்திருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் ம…

ஒரு மகா கலைஞனின் ஆசி - காட்பாதர் தருணங்கள்

Image
ரம்மியமான மாலைப்பொழுது.
நூற்றாண்டு கண்ட கல்வி நிறுவன வளாகம்.
இந்திய திரையுலகின் பல முத்துக்களை தந்த கலைக்கடல் அந்த அறிவகம். நடைபெற்றுக் கொண்டிருந்த குறும்படவிழா ஒத்த அலையியக்கத்திற்கு வலு சேர்த்துக்கொண்டிருந்தது. எனது ஆதர்சன கலைஞனை மிக அருகில் நின்று பார்க்கிறேன். இதற்கு முன்பு அவரை பலமுறை பார்த்திருந்தாலும் இப்போது அவரை ஒரு விசேஷ காரணமுடன் நோக்குகிறேன்.
எனக்கே அவரைப் பார்ப்பதில் கொஞ்சம் பிரம்பிப்புதான். அரை டிரவுசர் பொடியனாக நானிருந்த காலத்தில் ஒரு படத்தில் அவர் “ பீடா சேட்டாக” வந்த அவதாரத்தை கண்டு மிரண்டு இருக்கிறேன்.
அவ்வை சண்முகியில் ஊமை பிராமண சமையல்காரனாக அவரின் சேஷ்டைகளை கண்டு குலுங்கி குலுங்கி சிரித்திருக்கிறேன்.
எது தேவையோ அதுவே தர்மம் என்கிறது கீதை.
திரைத்துறையில் எது தேவையோ அதனை கொடுத்து அதன் தர்மத்திற்கு வாழும் மகா கலைஞன் நாசர் தான் அவர்.                                                                  Selfie with Nasser Sir
அவரிடம் ஆசிபெற எனது காட்பாதர் திரைக்கதை தமிழாக்க நூலின் ஒரு பிரதியை கொடுத்தேன்.
நல்ல படங்களின் திரைக்கதைகள் ஆவணமாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். …

சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும் ; அஜயன் பாலா

Image
ஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல அனுபவங்களுக்கு சமமானது.
பல அனுபவங்களே தொகுப்பாக வந்தால் எப்படியிருக்கும் ?
அது தான் “ சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்” கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளரான அஜயன்பாலா தன் வாழ்வில் நிகழ்ந்த சுவரஸ்யமான தகவல்களை அழகான கட்டுரைகளாக வடித்திருக்கிறார்.
ஒல்லி பெல்லி நடிகை சிம்ரன் மீதான் ஆரம்பகால ஈர்ப்பு, பின்னாளில் அதே சிம்ரன் குண்டு பூசனையாக இருக்க யாரென்றே சரியாக அடையாளம் தெரியாமல் அவர் முன் உட்கார்ந்து,சந்தேகமுடன் கதை சொல்லிவிட்டு ஆமா ! நீங்கள் சிம்ரன் தானே என்று அவரிடமே கேட்ட அப்பாவித்தனம் என நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறது முதல் கட்டுரை.
தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரவேசம் அவரின் வாழ்வில் எத்தகைய தன்னம்பிக்கையை விதைத்தது என்பதை விவரித்து, அவரின் ரசிகனாக உருமாறி, இப்போதைய நாட்களில் ரஜினியின் செயல்பாடுகளின் தெளிவின்மையை அவரின் கோடனான கோடி ரசிகர்களின் முதல்வராக முன்னின்று கேள்வி கேட்கிறார் எழுத்தாளர் அஜயனபாலா.
ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்த இன்னொரு மனிதனுடனான தனது வாழ்வு முழுவதும் பயணித்துகொண்டே இருக்கிறான். …