Posts

Showing posts from May, 2014

புதிய பிரதமருக்கு பத்து கட்டளைகள் !

Image
தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. நரேந்திர மோடிதான் பிரதமர் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் நாட்டிற்கு மிக அவசியமான மாற்றங்கள் என்ன ? இதை வேண்டுகோளாக எழுதலாமா இல்லை கட்டளையாக எழுதலாமா என்று யோசித்து, காசுக்காக ஓட்டை விலை பேசாமல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள வாக்காளன் என்ற உரிமையில் கட்டளையாகவே எழுதுகிறேன்.
புதிய பிரதமருக்கு பத்து கட்டளைகள்
அவசியத் தேவை நூறு சதவீத கல்வியறிவு. சுதந்திரம் பெற்று அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் இந்த தேசம் கல்வியறிவில் முழுமைப் பெறவில்லை என்பது வெட்ககேடான ஒன்று. இந்த ஐந்து ஆண்டுகளிலாவது நூறு சதவீத கல்வியறிவு பெற முழுமையான செயலாக்கம் தேவை. முளைத்து மூன்று இலை விடாத நிலையில் மொபல்போனை எடுத்து ஆராய்ந்து Angry bird விளையாடுகின்றன கிராமத்து பொடிசுகள். பச்சைக்குழந்தைகள் கூட தொழில்நுட்ப பழகிவரும் நிலையில்,இன்னும் பழமையான பன்னிரெண்டு ஆண்டு கல்வி முறை கதைக்கு உதவாது.இருக்கும் பழமையான கல்வி முறையை முற்றிலும் மாற்றி புதிய கல்வி வயது வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க உடனடி அவசர சட்டம் தேவை. மூன்று …