Posts

Showing posts from October, 2013

சீனா அண்ணன் தேசம் - திருமதி சுபஸ்ரீ மோகன்

Image
இமயம் எனக்கு இன்னொரு வாசஸ்தலமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் என்னை மிகவும் ஈர்த்த பகுதி திபெத்திற்கு உட்பட்ட இமயபகுதிதான். இமயத்தின் உச்சியில் இத்தனை உயரமான  நாட்டில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் சாலைகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தும்.நேபாள- திபெத் எல்லையான ஷாங்மூ முனையை தாண்டிய வினாடியில் இருந்து ஆங்காங்கே ( ஹாங்காங் இல்லேநம்ம லாங்குவேஜில் அங்கங்க.. இதுவும் ஆவ்…எப்படி சொன்னாலும் சீனா சவுண்டுதான் வருது…) பறக்கும் அஞ்சு நட்சத்திர சிவப்பு கொடிகள் என் கண்ணை உறுத்தும்.இப்படி அநியாயமா இந்தசீனாக்காரன் திபெத்தை ஆக்ரமிப்பு செய்திருக்கிறானே என்று கோபம் வரும். சீனாக்காரன் கட்டுப்பாட்டில் இருக்கிறதாலதான் திபெத் ஜொலிக்கிறது…இல்லையென்றால் குளிக்க கூட தெரியாத இந்த மக்கள் இதனை இன்னும் மோசமாகதான் வச்சிருப்பாங்க என்று என் அண்ணன் பி.ஆர்.சந்திரன் முன் வைக்கும் கருத்துக்களுடன் மோதல்களை நிகழ்த்தினாலும் நாளடைவில் சீனாவின் ஈர்ப்புசீனப்பெண்களைப் போலவே என்னுள் ஊடுருவி நிற்க ஆரம்பித்துவிட்டது. அடுத்தடுத்த பயணங்களில் பயணம் இலகுவாக கொஞ்சம் சீனமொழி கற்றுக்கொள்ளுவோமே என்று சீனப்பயணம் சென்று வந்த அண்ணன் பொன்.காசி…