Posts

Showing posts from August, 2013

களிமண்ணு - கவித்துமான சினிமா !

Image
பிரெஞ்சின் பிரபல இயக்குனர் பிரான்கைஸ் ட்ருபோர்ட்  ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்று குறிப்பிடும்போது இப்படி சொல்கிறார் “ ஒரு படத்தை ஒருவர் பார்க்கும் போது அந்த மொழி அறியாத ஒருவருக்கு கூட தொண்ணூறு சதவீதம் தெளிவாக புரியவேண்டும் என்கிறார். திரைப்படம் என்பது காட்சி மொழி. உரையாடல் என்பது இரண்டாம்பட்சம்தான்.காட்சி மொழித் திரைப்படங்களை மிக அரியதாக மாறிவரும் சூழலில், முழுமையான அழகியலோடு வெளிவந்திருக்கும் திரைப்படம் “களிமண்ணு”.
தன்மாத்ரா, பிரணயம் போன்ற மாறுபட்ட படங்களை தந்த மலையாள இயக்குனர் பிளஸ்ஸியின் முற்றிலும் மாறுபட்ட படம் “களிமண்ணு”. இந்த படத்தின் கரு இந்திய சினிமாவுக்கே புதியது எனலாம். நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவக் காட்சியை படமாக்கினார், இந்திய பாரம்பரியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார் என்று பல குற்றசாட்டுகளை சுமந்தபடி இந்த படத்தை இயக்கி முடித்துள்ள பிளஸ்ஸிக்கு இப்படம் ஒரு நிஜமான மைல்கல். ஒரு கலைபடைப்பை, கமர்ஷியல்தனமுடன் தரும் ஆளுமை என்பது எளிதான ஒன்றல்ல. இதில் வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர்.
முதல்காட்சி ஒரு பெண் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயலுகிறாள்.தொடர்ந்து ஒ…