Posts

Showing posts from October, 2011

சதுரங்கம் – ஒரு செய்தியாளனின் வாழ்க்கைப் பயணம் !

Image
கோ – படம் பார்த்தவர்கள் அனைவரும், இப்போது தானே பத்திரிகைதுறை சார்ந்த படம் பார்த்தோம், அதுக்குள் இன்னொன்றா என்று கேட்டீர்களானால் ஏமாந்து போவீர்கள்.

ஏனில் இது செய்திதுறை பற்றிய மற்றொரு படமல்ல!

ஜனநாயகத்தின் ஏனைய தூண்களான அரசியல், காவல், நீதி ஆகியவை தவறு செய்யும்போது சுட்டிகாட்டும் நான்காவது தூணாகிய செய்திதுறை சார்ந்தவர்களின் நிஜவாழ்க்கையை இயல்பாக பேசும் படம் சதுரங்கம். ஒரு நேர்மையான செய்தியாளனுக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்படுகிறது. அவன் இந்த செய்திகளை வெளிப்படுத்துவதின் மூலம் எத்தகைய அபாய நிலைக்குள் சிக்கிகொள்கிறான் என்பதை அழகிய காதல் கொண்டு விவரிக்கிறது சதுரங்கம்.


திசைகள் பத்திரிகையின் புலனாய்வு செய்தியாளனாகிய திருப்பதிசாமி ( சிறீ காந்த் ) மிகவும் துணிச்சலான செய்தியாளன். கொலை செய்தால் தான் சிறைக்கு போகும் நிலை மாறி கொலை செய்வதற்காகவே சிறைக்கு செல்லும் அதிபயங்கர கொலைகாரர்கள் நிறைந்த சிறைச்சாலைக்கு செல்கிறார். அங்கு தங்கி சக கைதிகளிடம் பழகி, சிறைச்சாலையின் தகிடுதத்தங்களை வெளிப்படுத்துகிறார். இதனால் சிறைத்துறை அமைச்சர் உட்பட பலரின் பதவி காலியாகிறது. திசைகள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இ…