Posts

Showing posts from September, 2011

தலை நிமிரும் தமிழ் சினிமா : எங்கேயும் எப்போதும்

Image
நேற்று ஒரு சினிமா நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “தமிழ்நாட்ல நாளையோட சினிமா காலி தோழர் ! இந்த அம்மா திடீர்னு கேளிக்கை வரியை 30 சதவீதம் உயர்த்திடுச்சி.....ஏற்கனவே பெப்சி பிரச்சனை வேற....”

கடந்த இரண்டு நாட்களாக அவரின் வார்த்தைகள் மனதை குடைந்து கொண்டிருந்தது.ஆனால் எங்கேயும் எப்போதும் பார்த்தபின்பு அந்த அச்சம் தேவையற்றது என்பது உண்மையிலும் உண்மை.

எங்கேயும் எப்போதும் ! தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.

ஹீரோக்கள் தான் சினிமாவின் தலைவிதியை நிர்ணயிக்க முடியும் என்ற விதியை உடைத்து, சினிமா என்றும் இயக்குனர்களின் ஊடகம் என்பதை நிருபித்து இருக்கும் தோழர் இயக்குனர் சரவணனுக்கு ஒரு பூங்கொத்து.

கதையின் களத்திற்கு அவருக்கு இன்னொரு பூங்கொத்து தரலாம்.நாம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது விபத்துக்களை பார்க்கிறோம். ஒரு “உச்” அல்லது ஒரு சின்ன வருத்ததோடு அதனை மறந்து விடுகிறோம்.அப்படி ஒரு விபத்து, அதன் பாதிப்பு, அதில் சிக்குண்டவர்களின் நிலை, வாழ்ந்த வாழ்க்கையை, எப்படி இந்த விபத்து புரட்டிப் போடுகிறது என்பது தான் ஒருவரிக்கதை.திருச்சியில் இருந்து சென்னைக்கு இண்டர்வியுக்கு வருகிறார் அமுதா ( அனன…

இதயத்தை திருடிய “பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை” புத்தக வெளியீட்டு விழா.

Image
சமான்யனையும் சரித்திர புருஷனாக்கும் ஆற்றல் சிலருக்கு உண்டு. அவர்களின் ஆற்றலால் வேடிக்கை பார்க்க போன இடத்தில் நாயகனாகும் அதிர்ஷ்டம் மிக சாதரணமான மனிதனுக்கு ஏற்படும்.பார்வையாளனாக இருக்கையில் நெருக்கி உட்கார்ந்து கொள்ள இடம் தேடும் ஒருவன் திடீரென மேடையை அலங்கரிக்கும் “முக்கிய பிரமுகராக” மாற்றப்படுவான். அந்த வகையில் சாதாரண வாசகனான என்னை தனது புத்தக வெளியீட்டில் இடம்பெற செய்து அவரது வரலாற்றில் சிறு இடம் கிடைக்க செய்த அசாத்திய அன்புமிக்கவராகி நிற்கிறார் அண்ணன் அஜயன் பாலா.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. சென்னைக்கு வந்த புதிது. சினிமா ஆவலில் புத்தகங்களையும். திரையரங்குகளையும், திரைப்பட விழாக்களையும் தேடி அலைந்துகொண்டிருந்த காலம், டான்பாஸ்கோவில் ஒரு குறும்பட விழா. இரண்டு நாள் விழா முடிவில் திரையிடப்பட்டது “ பை சைக்கிள் தீவ்ஸ் “ திரைப்படம். இன்றைய திரைதொழில்நுட்பத்தின் பிதாமகனாக திகழும் பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் தரிசனம் அங்குதான் முதன் முதலாக கிடைத்தது. அந்த தரிசனம் பெற சிலம்பு 2002 என்ற குறும்பட விழாவின் மூலமாக என்னைப் போன்ற ”பொடியன்களுக்கு” வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர் அஜயன் பாலா. அதற்கு…

பிள்ளையார் சதுர்த்தி ! - கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் !

Image
விண் + நாயகன் = வினாயகன். அதாவது விண்ணுலகம் என்று போற்றப்படுகின்ற இந்த பிரபஞ்சத்திற்கே நாயகன். விண்ணுலகம் என்பது பஞ்ச பூதங்களின் கூட்டு. இந்த பஞ்சபூதங்களுக்கு நாயகனாக விளங்கும் இயற்கையைப் போற்றுவோம் !

கணம் ( பஞ்ச பூத கணங்கள் ) + அதிபதி = கணபதி !

ஐந்து ( பஞ்ச பூதங்கள் ஐந்து ) + கரத்தன் = ஐந்துகரத்தன்.

கணம் ( பஞ்சபூதங்கள் ) + ஆகாஷ் = கணேஷ்

இவையெல்லாம் மிஸ்டர் பிள்ளையாருக்கு நாம் கொடுத்துள்ள வேறு பெயர்கள். பிள்ளையார் என்பது ஒரு செல்லப்பெயர்.

நமது வாழ்வியல் இயற்கையோடு இணைந்தது. இயற்கைய போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற உண்மை தான் ஒவ்வொரு கடவுளின் பின்னும் ஒளிந்துள்ளது.

கடவுளை நோக்கும்போது கருத்தினை உற்றுப்பார் ! அங்கு கடவுளின் உருவம் மறைந்து கருத்தே நிலைத்து நிற்கும் என்பார் அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி.

ஆனால் இதனையெல்லாம் எடுத்து சொல்ல அறிவியல்புலம் கொண்ட ஆன்மிக பெரியோர்கள் இல்லாததால் இதுபோன்ற விழாக்கள் வெறும் சடங்காக மாறிவிட்டது வருத்ததுக்குரியது.

அதுமட்டுமின்றி கோலாகலமாக எல்லோரும் இணைந்து கொண்டாடவேண்டிய இதுபோன்ற விழாக்கள், இத்தகைய அடையாளம் திணிக்கப்பட்டதின் விளைவாக ஒரு குறிப்பிட்ட மத சடங்கா…