Friday, May 20, 2011

ரஜினிகாந்திற்கு என்ன வேண்டும் !

ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் சோகமுடனும் பதட்டமுடன் இருக்கின்றனர்.

ரஜினியின் இரத்தபந்தமான சத்யநாராயணா கெய்க்வாட்டிற்கே அவரைப் பார்க்க அனுமதியில்லை. பெங்களூரில் அவர் கதறிக் கொண்டிருக்க்கிறார்.

ஊடகங்களின் நிர்பந்தத்தின் காரணமாக செய்தியாளர்களை சந்தித்த திருமதி. லதா ரஜினிகாந்த், அவர் நலமுடன் இருப்பதாக கூறுகிறார்.

எத்தனையோ சமுகப் பிரச்சனைகள் அணிவகுத்து கிடக்க, எரிகிற வீட்டில் இருப்பதை பிடுங்குவதில் குஷி காணும் இக்கால ஊடகங்கள் ஏற்கனவே மிரண்டு கிடக்கும் ரசிகர்கள் மத்தியில் விதவிதமான செய்தி பரப்பி டிஆர்பியை ஏற்றிக்கொண்டு சந்தோஷ ஜல்லியடித்துகொண்டிருக்கின்றன.

உண்மையில் ரஜினிக்கு என்ன நோய் ?

அவர் ஒருவித வைரஸால் ( EBV வகை ) பாதிக்கப்பட்டு இருப்பது உண்மை. அது இப்போது வந்த வைரஸ் அல்ல. அவரின் சிறுவயதில் ஏற்பட்ட தொற்று இப்போது வெளிப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள நம்ப தகுந்த மருத்துவ வட்டாரம் சொல்கிறது. இதன் ஆரம்ப நிலையில் மயக்கம், காய்ச்சல், வாந்தி போன்ற குறீயிடுகளைத் தரும். உள்ளுறுப்புகளை பாதிக்கும் வாய்ப்புகளும் உண்டு.அதனால் சிறுநீரக செயல்பாட்டில் சிறு தோய்வு ஏற்பட அதன் காரணமாக டயாலிஸிஸ் செய்யப்பட்டு இப்போது சீராக இயங்கத் தொடங்கியுள்ளது.ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டு விட்டதால் கட்டுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மற்றபடி அச்சப்பட அவசியமில்லை. அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

சாதாரணமான ஒரு குடியானவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலே, அவரின் உறுவினர் ஒருவருக்கு மட்டுமே உடனிருக்க அனுமதி கிடைக்கும். அடுத்ததாக மற்ற பார்வையாளர்கள் பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி உண்டு. இதற்கு காரணம், வருவர்கள் மூலம் நோயாளிகளுக்கு கிருமித் தொற்றுக் கூடாது என்பதும், நோயாளிகள் மூலமாக பார்வையாளர்களுக்கு நோய் தொற்று கூடாது என்பதும் தான்.

இதனை பரபரப்பாக்குவது அவரின் எண்ணற்ற ரசிகர்களின் மனதில் ஒரு தோய்வை ஏற்படுத்தும். அந்த சோர்ந்த எண்ணங்கள் ஒன்று சேர்ந்து வலிமைப் பெறுவது நல்லதல்ல. எப்போது ஆரோக்கியமான எண்ணமும், அதனை வலிமை சேர்க்கும் முயற்சியும் நோயாளிக்கும் அவர் மீது அபிமானம் கொண்டவருக்கும் அவசியம்.

இது ரஜினிக்கு மட்டுமல்ல, சாதாரண குடியானவனுக்கும் பொருந்தும்.


சரி...ஊடகங்களின் பரபரப்பு இருக்கட்டும் !

ரஜினிக்கு இப்போது என்ன தேவை !

அவருக்கு தேவை.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி !

அதாவது ஜீவகாந்தம் பெருக்கம்.

ஜீவகாந்தம் என்பது கண்ணுக்கு தெரியாத காந்த ஆற்றல்.

உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்க, ஜீவகாந்தம் அவசியம். அது உண்ணும் உணவு, மற்றும் பிரபஞ்ச வெளியில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. தவம் செய்வதின் மூலமாக, அதீதமான வாழ்த்துக்களை மற்றவர்களிடம் இருந்து பெருவதின் மூலமாக நம் உடலில் ஜீவகாந்த அதிகரிக்கும்.

உடல் நோய்வாய்ப்படும் போது பிரபஞ்சத்தில் இருந்து ஜீவகாந்த சக்தியை கிரகிக்க தடுமாறுகிறது.

உடலில் ஜீவகாந்தம் குறைந்தால் உடல் நலம் பாதிக்கும்.ரஜியின் உடலில் ஜீவகாந்தப் பெருக்கத்தை மருந்து மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் நலக் கோளாறை சரிசெய்ய மருத்துவக் குழுவினர் செயல்ப்பட்டு வருகின்றனர்.ரஜினி யோகமுறைகள் அறிந்தவர். தானே தன் எண்ணத்தின் மூலம் சரி செய்யும் முயற்சியில் இப்போது ஈடுப்பட்டுக் கொண்டிருப்பார்.

அவரின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில்,நாம் நமது வழியில் எண்ணத்தின் வாயிலாக ஜீவகாந்த திணிவை அவருக்கு தர முயற்சிப்போம்.

வாழ்த்துக்கள் மூலமாக எதையும் சாதிக்க முடியும் என்கிறார். வேதாத்ரி மகரிஷி.

பதட்டப்படுவதைவிட, கவலைக் கொள்வதைவிட,இந்த சிறு முயற்சி வலிமை சேர்க்கும்.

எப்படி ?

மிகவும் எளிது ?

பிராத்தனை மற்றும் வாழ்த்துக்களால் முடியும்.

பிரார்த்தனை என்பது ஒரு Metaphor. ஆனால் வாழ்த்து என்பது ஒரு உளவியல் பயிற்சி.

பிரார்த்தனையில் இன்னொரு சக்தியின் மீது எண்ணத்தை செலுத்துவதின் மூலம் உங்கள் எண்ண ஆற்றலை செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துவதின் மூலம் நீங்களே உங்கள் எண்ணத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். பதட்டப் படாமல் ! வருத்தப்படாமல் ஒரு இடத்தில் அமைதியாக உட்காருங்கள். அது பூஜை அறையாகவும் இருக்கலாம். படுக்கை அறையாகவும் இருக்கலாம். முக்கிய அமைதி !

கண்களை மென்மையாக மூடிக்கொள்ளுங்கள்.

எண்ணத்தை இரு புருவங்களின் மத்தியில் முடிந்தவரை கொண்டு வாருங்கள்.
இப்போது உணருங்கள்.

அமைதி ! அமைதி ! அமைதி !

நீங்கள் உட்கார்ந்து இருக்கும் சுற்றமும் சூழலும் அமைதியில் இருப்பதை உணருங்கள்.
உங்களை சுற்றி ஒரு தெய்வீக சக்தி சூழ்ந்து இருப்பதாக உணருங்கள். அந்த சக்தி உங்கள் உடலில் பாய்வதாக இப்போது உணர்கிறீர்கள்.அந்த சக்தியின் ஊடே நீங்கள் ஒன்றன, உயிர்கலப்பு பெற்று இருக்கிறீர்கள்.

உங்களைச் சுற்றி தூய்மைப் பெறுகிறது.

உங்களைச் சுற்றி வலிமை பெறுகிறது.

இப்போது உங்கள் மூச்சு காற்றையே சிரமமின்றி கவனியுங்கள்.

இவ்வாறு ஒரு மூன்று நிமிடங்கள் உங்கள் மூச்சுக்காற்றையே கவனியுங்கள்.

அதற்காக மூச்சுகாற்றை வலிமையாக இழுக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ கூடாது.
மிக மென்மையாக கவனியுங்கள். அது மட்டும் போதும்.

இப்போது எண்களை எண்ணுங்கள்.

100
99
98
97
96
95
94
93
92
90
80
70
என்று ஒவ்வொரு எண்ணாக ஒன்று வரை எண்ணுங்கள்.

ஒன்று வரும்போது நீங்கள் கொஞ்சம் அரைத்தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் இருப்பீர்கள். உங்கள் எண்ண அலைச்சூழல் சுருங்கி மிகவும் கூர்மையாக இருக்கும்.

இப்போது நீங்கள் பிரபஞ்சவெளியில் மிதப்பதாக கற்பனையில் உணருங்கள்.

உங்களைச் சுற்றி ஆற்றல் களம் சூழ்ந்து கொண்டுள்ளது.

அந்த ஆற்றலில் நீங்கள் மிதந்துகொண்டுள்ளீர்கள்.

உங்கள் உடலில் அதீத சக்தி நிரம்பி வழிகிறது.

உடலில் இன்ப ஊற்றும். மனதில் அதீத அமைதியும் நிரம்பி வழிறது.

இப்போது ரஜினி அவர்களின் உருவத்தை கற்பனையில் கொண்டு வாருங்கள்.

உங்களுக்கு பிடித்தமான ரஜினியின் உருவம்.

உங்களுக்கு விருப்பமான உருவம்.

இப்போது ரஜின் உங்கள் முன்பு அமர்ந்து இருக்கிறார்.

நீங்கள் ரஜின் முன்பு அமர்ந்து இருக்கிறீர்கள்.

மிக வலிமையாக கற்பனை செய்யுங்கள்.

ரஜினியும் நீங்களும் எதிர் எதிரே உட்கார்ந்து இருக்கிறீர்கள்.

அதே நிலையில் பிரபஞ்சத்தை கற்பனையில் கொண்டு வாருங்கள்.

பிரபஞ்சம் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு.

பிரபஞ்சத்தில் ஒரு வெண்மை ஒளியை உண்டாக்குங்கள்.

கற்பனையில் தான் ! ஆனால் ஒரு நிஜமான ஒளி பிரபஞ்சத்தில் உருவாகிறது.

கண்களை கூசச் செய்கிறது அந்த ஒளி.

அந்த வெண்மையான ஒளியை ஒரு பந்துபோல் உருட்டி உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு
வாருங்கள்.

இப்போது அந்த ஒளி உங்கள் கட்டுப்பாட்டுக்கு வருகிறது.

அதனை அப்படியே ரஜினியின் உடலில் பாய்ச்சுங்கள்.

ரஜினியின் உடலில் ஆற்றல் பாயட்டும்
அவரின் உடலில் உள்ள நோய் தீரட்டும் !

ரஜினியின் உடலில் ஆற்றல் பாயட்டும் !
அவரின் உடலில் உள்ள நோய் தீரட்டும் !

ரஜினியின் உடலில் ஆற்றல் பாயட்டும் !
அவரின் உடலில் உள்ள நோய் தீரட்டும் !

அந்த வெண்மை நிற ஒளி, ரஜினியின் உடலில் உள்ள நோய் குறியீட்டை உடலில் இருந்து அப்புறப்படுத்தி பிரபஞ்சத்தோடு பிரபஞ்சமாக கலந்து கரைவதாக உங்கள் கற்பனையை முடித்துக் கொள்ளுங்கள்.ஒரு பாவனையில் உங்கள் எண்ணத்தினால் ஒரு சங்கல்பத்தை சொல்லுங்கள்.
கற்பனையில் ரஜினி அவர்களின் நோய் தீருவதாக, அவர் நலம் பெறுவதாக உணருங்கள்.

இதோ அவர் நலம் பெறுகிறார்.

இதோ அவர் உற்சாகம் பெறுகிறார்.

இதோ ரஜினி ஆரோக்கியமாக புத்துணர்வோடு எழுந்து வருகிறார்.

நீங்கள் விரும்பும் வகையில் ரஜினியின் புத்துணர்வை உணருங்கள்,

இப்போது அந்த காட்சியை சில நிமிடங்கள் அனுபவியுங்கள்.
இப்போது வாழ்த்துலகில் இருந்து வெளியே வருகிறோம்.

பத்தில் இருந்து ஒன்று எண்ணுகிறோம்.

ஒன்று எனும் போது பிரபஞ்சவெளியில் இருந்து நாம் தவம் செய்யும் அறைக்கு வருகிறோம்.
நம்மை சுற்றி ஆற்றல் நம் உடலில் பரவுகிறது.

அந்த ஆற்றலை நம் உடலில் பெருக்கிக் கொண்டு கைகளால் மென்மையாக கண்களில் ஒத்து,லேசாக கண்களைத் திறந்து வாழ்த்து மற்றும் தவத்தை முடித்துக் கொள்வோம்.

இது ரஜினிக்கு மட்டுமல்ல.
உற்றார், உறவினர் மற்றும் யார் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இத்தகைய எண்ண ஆற்றலை

பெருக்குவதின் மூலம் வாழ்த்து சொல்லலாம்.

பெங்களுரில் பேசிக்ஸ் என்னும் பெயரில் ஹிப்னோதெரபி பள்ளி நடத்தி வரும் உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தரிடம் ஹிப்னோதெரபி படித்த போது அவர் சொல்லித தந்த self hypnosis நுட்ப பயிற்சியில் இது ஒரு வகை.

இது ஒரு வலிமையான உளவியல் பயிற்சி !

இதில் மாயமும் இல்லை ! மந்திரமுமில்லை 1

செய்து பாருங்கள்

பலன் நிச்சயம்.

2 comments:

 1. ராஜ் , இந்தப் பதிவு ரஜினிக்கு மட்டுமல்ல , ரஜினி ரசிகர்களுக்கும் தான். இந்த ஊடகங்கள் என்றுமே செய்தி என்றால் கெட்ட செய்தி என்றே அடையாளப் படுத்திவிட்டார்கள். மேலும் ஆதி மனித வன்மம் குரோதம் போன்ற குணங்களின் மீதங்கள் நாம் நாகரீகமடைந்த பிறகும் நம்முடன் ஒட்டிக் கொண்டுள்ளதின் விளைவே மனிதர்கள் மற்றவர்களைப் பற்றிய கெட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது . இன்றைய புலனாய்வுப் பத்திரிக்கைகள் மற்றும் செய்திச் சானல்கள் சம்பாத்தியமே மனித மனதின் இந்தக் குறைபாடினால்தான் . கவனித்து இருக்கிறீர்களா , கொலை ,கொள்ளை , கற்பழிப்பு ,கடத்தல் , கள்ளக் காதல் , இதெல்லாம் மனிதனை உடனே கவர்ந்து அதன் பக்கம் கவனம் ஈர்க்கிறது . இதெல்லாம் அவனின் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆதி மனித ரத்த மிச்சங்களே.

  நம் இந்திய யோக மற்றும் ஞான மரபில் அனைத்தை விடவும் சக்தி மிக்க ஒரு விஷயம் மனித மனம் தான் என்று சொல்லப் பட்டுள்ளது . "கல்பவிருக்ஷம் " என்பது நினைத்தது எதையும் கொடுக்கும் தரு அல்ல , அது ஒரு நிலையான மனதின் குறியீடு ! சரியான விதத்தில் கையாளும் பொழுது மனித மனதை விட சக்திமிக்கது இந்தப் பிரபஞ்சத்திலேயே எதுவும் கிடையாது , அதே சமயம் விழிப்புணர்வு இல்லாமல் பயன்படுத்தும் பொழுது மனித மனதை விட அபாயமான விஷயமும் கிடையாது .

  மனதின் எண்ணங்களுக்கு உள்ள வலிமையைப் பற்றி நீங்களே அற்புதமாக எழுதிவிடீர்கள் .

  இப்படித்தான் , ஒரு பெண்மணி கனவில் ஏதோ ஒரு அபாயமான தனிமையில் மாட்டிக் கொள்கிறாள். ஒரு பெரிய பயங்கர கோரமான உருவம் அவளை நோக்கி வருகிறது , அருகில் வெகு அருகில் , அந்த உருவத்தின் மூசுக் காற்று அவளின் மேனிமீது படும் நெருக்கத்துக்கு வந்து விட்டது. அந்தப் பெண்மணி தன் தைரியத்தை எல்லாம் ஒன்று சேர்த்து , அந்த ஜந்து விடம் நீ இப்பொழுது என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க ,

  அந்த ஜந்து என்ன சொல்கிறது தெரியுமா

  "இது உன்னுடைய கனவு அதை நீ தான் முடிவு செய்ய வேண்டும் "

  அதேபோல்தான் இந்த வாழ்கை நம்முடையது , நான் என்னவாக வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் ! வேறு வெளி சூழ்நிலைகளோ இல்ல கிரகங்களோ அல்ல !

  ராஜ் ஒரே ஒரு விண்ணப்பம் , உங்களது இந்த அற்புதமான , அவசியமான பதிவை ரஜினி ரசிகர் ஒருவரால் எந்த எதிர்பார்ப்புமில்லாத வகையில் ரஜினி ரசிகர்களுக்காக நடத்தப்பட்டு வரும் ஒரு வலைத்தளத்தில் போடுவதற்கு அனுமதி வேண்டும் . அவருக்கு இந்தக் கட்டுரையை மின்னஞ்சல் செய்துவிட்டேன் . உங்கள் வலைப்பூவின் சுட்டியையும் இணைத்து .

  அன்புடன்
  முரளி

  ReplyDelete
 2. excellent post..thanks

  ReplyDelete

குகையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தியானம் !

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்ட பின் தாய்லாந்த்தின் சீல் குழு புகழ்பெற்றதோ இல்லையோ தியானமும் யோகமும் புகழ்பெறத...