Posts

Showing posts from 2010

கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும்

காயகல்பம் என்பது மருந்தல்ல, ஒரு பயிற்சி என்று குறிப்பிட்டும்,பல மின்னஞ்சல்கள் மெஸ் விஸ்வாதனிடம் முள்ளங்கி சாம்பார் வைக்க வழிமுறைக் கேட்பது போல காயகல்பம் எப்படி தயாரிப்பது,எந்தக் கடையில் சுத்தமான காயகல்பம் கிடைக்கும். எம்.ஜி.ஆரின் பளபளப்புக்கு காயகல்பமும் தங்கப் பஸ்பமும் தான் காரணமாமே என்று வருகின்றன.

எம்.ஜி.ஆரின் பளபளப்புக்கு என்ன காரணம் என்று அவரின் ஒப்பனைக் கலைஞரை தான் கேட்கவேண்டும். மேலும் எம்.ஜி.ஆர் இறக்கும்போது நான் ரொம்பச் சின்னப் பையன், அவ்வளவு தெளிவாக அவர் நிஜ முகம் நினைவில் இல்லை.. எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று சொல்லலாமா ? வேண்டாமா ? என்று தெரியவில்லை..?!

2003 ல் சாத்தான்குளம் இடைத் தேர்தல்.ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது செய்தி சேகரிக்க சென்றிருந்தேன்.ஒரு கிராமத்து மக்கள், அம்மு மட்டும்தான் வருதா...வாத்தியார் வரலையா ? என்று கேட்க யாரு வாத்தியார் ? எம்.ஜி.ஆரா ? அவர் எப்போழுதோ செத்துட்டாரே என்று , சொல்லப் போக அங்கிருந்த வயதானப் பெண்கள் துடப்பகட்டையை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள் அடிக்க.

எம்.ஜி.ஆர் முகத்தின் பளபளப்பை விடுங்கள். காயகல்பம் பயின்றால் நிச்சயம் உங்கள் முகம் பளபள…

சபரிகிரியும் சதுரகிரியும்

அதிகாலையில் சரணகோஷம் ஒலிக்கிறது.

சபரிமலைக்கான பருவம் ஆரம்பித்துவிட்டது.சின்ன சின்ன கடைகள் முதல் பெரிய சந்தைகள் வரை கருப்பு,காவி,பச்சை, நீல நிற உடைகளும்,விதவிதமான மாலைகளின் வியாபாரங்களும் களைக் கட்டத் தொடங்கிவிட்டன.

இந்த வருடம் சுமார் 40 மில்லியன் யாத்ரீகர்கள் எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன. ஒரு பக்தர் 100 ரூபாய் வழங்கினாலும் குறைந்தபட்சமாக 400 கோடி ரூபாய் வருமானம்.சுமார் நான்கு கோடி பக்தர்களை ஈர்க்கும் விதமாக அங்கு என்ன இருக்கிறது ?

சபரிமலை பக்தி மார்க்கத்தின் அடையாளம். பக்தி மார்க்கத்தில் நம்பிக்கை மட்டுமே வலிமையாக செயல்படுகிறது.நம்பிக்கை என்பது எண்ணத்தின் அடிப்படையானது. சபரிமலை சென்றால் இன்னது நடக்கும் என்ற நம்பிக்கை.சபரிமலை சக்தி வாய்ந்த தளம் என்ற நம்பிக்கை !

ஒரே சமயத்தில் இத்தனை கோடி மக்கள் நினைக்கும் போது எழும் எண்ண ஆற்றல். இவைதான் சபரிமலையின் சக்திக்கு காரணம். இது இல்லாமல் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதனை இக்கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.

எண்ணத்தினால் எதையும் உருவேற்றி ஈர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இதற்காகவே கோயில்களில் லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்ற ச…

ரஜினியின் சிவாஜியும் : உபேந்திராவின் சூப்பரும்.

கன்னடத் திரையுலக அதிர்ந்துகொண்டிருக்கிறது.

காரணம் ஒரு படம்.

“சூப்பர் ” என்ற தலைப்பு. பேருக்கேற்ப சூப்பர் வெற்றி.

கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா பத்தாண்டுகளுக்கு பின்பு இயக்கி நடித்திருக்கும் படம். தமிழுக்கு பரிட்சையமான அதிரடி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் படைப்பு.

வெளியாகி ஐந்து நாட்கள் ஆகவில்லை. கர்னாடாகாவே அதன் வெற்றியில் அதகளப்படுகிறது. கன்னடத் திரைத்துறை ஒரு காலத்தில் இயல்பான படங்களுக்காக சர்வதேச தரத்தில் நின்றது.

கன்னடத்தில் படம் பண்ணுவது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. புட்டண்ணா கனகல் என்று ஒரு இயக்குனர்,நம்ம ஊரில பாலசந்தர் உட்பட பலரையும் பாதிக்கச் செய்தவர். பாலச்சந்தரின் பல படங்களில் புட்டண்ணா கனகலின் பாதிப்பு இருக்கும். பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றோர் கன்னட பிரவேசம் செய்தவர்களே.பாரதிராஜா கன்னடப் படங்களில் உதவி இயக்குனராக தொழில் கற்றவர்.

ஆனால் இன்றைய கன்னட சினிமாவின் நிலை கொஞ்சம் பரிதாபகரமானது.வேற்று மொழிப் படங்கள் வியூகம் அமைத்து தாக்க கன்னடத் திரையுலகம் கலங்கி போய் நிற்கிறது.

பத்திரிகை செய்திகளைப் பார்த்தால் ஏதோ கன்னட திரையுலகம் மாற்றுமொழிப் படங்களுக்கு குறிப்பாக தம…

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும் !

சுய இன்பம் பற்றி உங்கள் கருத்து என்ன ?

சுய இன்பம் நல்லதா ? கெட்டதா ?

மிஷ்கின் என்றொரு படைப்பாளி.

மூன்று படங்களைக் கொடுத்திருக்கிறார்.
ஒன்று சித்திரம் பேசுதடி
இரண்டு அஞ்சாதே
மூன்றாவதாக நந்தலாலா.

நந்தலாலாவை இணையத்தளங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.சில விமர்சனங்கள் நந்தலாலா, ஜப்பானின் டகேஷி கிட்டானோவின் கிகுஞ்ஜிரோ என்ற படத்தின் தழுவல் என்றும்,பாதிப்பு என்றும் சொல்லித் திரிகின்றன.

பாரதிராஜாவின் வருகைக்கு பின்னர் மண்ணின் மனம் என்று சொல்லிக்கொண்டு வாய்க்கால்,வரப்பு,வெள்ளைப் புடவை,தாலி,வேப்பிலை அம்மன் டான்ஸ்,ஆலமரம்,பஞ்சாயத்து, பஞ்சாயத்து சொம்பு, இல்லாத படங்கள் இல்லை.

பாரதிராஜாவின் படைப்புகள் வேறு : இமயத்திற்கு நிகர் இமயமே !

ஆனால் அவரின் பாதிப்பில் வந்தோம் என்று சொல்லிக்கொண்டு படம் எடுப்பவர்கள் ஆட்டுக் கொட்டடியில் கதாநாயகியை கதறக் கதற கற்பழித்தல், தக்காளியை தாவணி மீது உருளச்செய்தல், தொப்புளில் பம்பரம்,ஆம்லெட் இத்தியாதிகளை விடுதல்,வயது பெண்ணின் வயிற்றைத் தொடுவதின் மூலம் வயசுக்கு வரச்செய்தல் போன்ற அரிய செயல்களை ஏற்றுகொண்ட நாம் கண்டிப்பாக நந்தலாலா, கிகுஞ்ஜிரோவின் தழுவல் என்றாலும் எற்றுக் கொள்ளவே…

கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும் ! (கண்டிப்பாக )

கல்யாணமானவர்களுக்கான சமாச்சாரங்களை கல்யாணம் ஆகாதவன் எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமான செயல்தான், இருந்தாலும் சில தகவல்களை அறிந்துகொண்டு தெரிவிக்க கல்யாணம் ஆகியிருக்க தேவையில்லை என்பதால் இதை எழுதுகிறேன்.

கைப்பேசியில் ஜல்லி அடிப்பதென்றால் எனக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிடுவது மாதிரி.அதுவும் என் தாய்த்தமிழ் இளம்பெண்களிடம் வறுபடுவது என்றால் எனக்கு திகட்ட திகட்ட கொண்டாட்டம்தான்.

நான் அதிகம் வம்பளப்பது என்னைவிட புத்திசாலிப் பெண்களிடம்..ஹி..ஹி..காரணம் பூவோடு சேர்ந்து இந்த நாரும் மணக்கும் என்பதில் நம்பிக்கை.பொது அறிவை வளர்க்க என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எனது பள்ளிப் பருவத் தோழி ப்ரியா.மருத்துவக்கல்லூரியில் முதுநிலை இறுதியாண்டு படித்துகொண்டே ஒரு சிறிய தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றுகிறார்.வாரம் ஒருமுறையாவது தொலைபேசி விடுவார். சமீபகாலமாக அவ்வளவு பேசுவதில்லை.நம்மிடம் பேசாமல் அவருக்கு அப்படியென்ன வேலை. ஒரு பரபரப்பான காலையில் ப்ரியாவை தொந்தரவு செய்தேன்.

“இல்லை ராஜ் ! இப்ப என்னை Maternity Ward - ல போட்டுட்டாங்க அதனால நேரம் காலம் பார்க்காம வேலை செய்யவேண்டியதா இருக்கு. ஒருநாளைக்கு குற…

நிற்கையில் நிமிர்ந்து நில் !

எண்ணத்தின் ஆற்றல் என்ன ?

நெல்லை அருகே பத்தமடையில் பிறந்து இமயம் வரை ஆன்மிக கோலோச்சியவர் சுவாமி சிவானந்தர்.சுவாமி என்பது அடையாளம் அல்ல. அது ஒரு அடைமொழி அன்பின் மிகுதியால், ஆன்மிக வலிமைப் பெற்றவர்களுக்கு தரும் அடைமொழி.

சிவானந்தர் எண்ணம் என்ற நூலில் இவ்வாறு சொல்கிறார்."எண்ணம்தான் உலகின் வலிமையான ஆயுதம். எண்ணம் வினாடிக்கு சுமார் 1,36,000 மைல் வேகத்தில் பயணிக்க கூடியது. உதாரணத்திற்கு இந்த பூமி பந்தை எடுத்துக்கொள்வோம். சுமார் 25000 மைல் விட்டம் உடையது. ஒரு எண்ணத்தை விதைக்கிறீர்கள் எனில்,நீங்கள் நினைக்கும் எண்ணம் ஒரு வினாடியில் இந்த பூமியை சுமார் ஆறு முறை சுற்றி வரும்".

எண்ணத்தைவிட வேகமாக பாயும் துப்பாக்கித் தோட்டாக்கள் இருக்கிறதா ?

எண்ணத்தின் வேகத்தை விஞ்சும் ஏவுகணை இருக்கிறதா ?

எண்ணத்தை விட உறுதியாக தாக்கும் ஆர்டிலறிகள் இருக்கிறதா ?

இன்றைய உலக நிகழ்வுகளுக்கெல்லாம் அடிப்படை எண்ணம்.

அது தனிமனித எண்ணமாக இருக்கலாம்.

ஒரு குழுவின் எண்ணமாக இருக்கலாம்.

எண்ணம் தான் உலகை ஆட்டிப் படைக்கின்றது.

இன்று தமிழீழ மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது.

தமிழர்கள் மீதும் தமிழீழத்தின் மீது நம்பிக்கை கொண்…

நட்பைக்கொண்டாடுவோம் !

நட்பு…!


இந்த ஒரு வார்த்தை பரவசமானது.

இந்த ஒரு வட்டம் நம் வசம் உண்மையாக இருந்தால்,உலகம் நம் வசமாகும்.

உலகின் முதல் உறவு நட்பாகதான் இருக்கவேண்டும்.

ஆதாம் ஏவால் முதல் சந்திப்பே நட்புதான். முதல் பார்வையே சினேகப்பார்வைதான்.

உள்ளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிதான் நட்புக்கு உயிர்கொடுத்தது.

அது உடல் கவர்ச்சி ஆனபோது காமம் வழிந்தது.

காமம் தணிந்து காதல் நின்றது.

காதல் என்று சொல்லும்போது.அது நட்பின் கொஞ்சம் கலப்பட நிலைதான்.

இன்றும் காதலுக்கு போடப்படும் தூண்டில் நட்பில்தான் ஆரம்பிக்கிறது.

முன் காமத்தில் நிறைந்து காதலில் முடிந்தது.

இன்று காதலில் நிரம்பி காமத்தில் முடிகிறது.

மற்ற உறவுகளை அந்த அந்த நிலையில் தான் நின்று பார்க்க முடியும்.

ஆனால் நட்பு மற்றும் எல்லா நிலைகளிலும் நின்று, வென்று பார்க்க உதவும்.

மற்ற உறவுகளை ஒரே கோணத்தில் தான் பார்க்கவேண்டும்.

ஆனால் நட்பின் பரிமாணம் அளப்பரியது,அளவில்லாதது.எல்லா கோணத்திலும் பார்க்கமுடியும்.

நீங்கள் தாயுடனும் தந்தையுடனும் மனைவியுடனும் நட்பாக நின்று பார்க்கலாம்.

நீங்கள் இங்கெல்லாம் நட்பாக நிற்கும்போது உங்களின் உயரம் சமன்படுகிறது. உள்ளம் மேலே மேலே செல்கிறது.

உங்கள…